உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க.,வினர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

அ.தி.மு.க.,வினர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

விருத்தாசலம்: முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குபேர தேவதாஸ், அருண்குமார், அக்பர்ஷா முன்னிலை வகித்தனர்.விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.விருத்தாசலம் நகர துணை செயலர் மணிவண்ணன், ஒன்றிய இணை செயலர் பிரபாகரன், ஒன்றிய துணை செயலர் தினேஷ்குமார், பேரூர் பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் பேரூர் அவைத்தலைவர் அப்பாதுரை, கிளை செயலர் ராமு, வட்ட செயலர் அக்பர் அலி, முகமது ஷபி, ஜாபர், சக்திவேல், ராஜதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலர் சுதாகர், விக்னேஷ், மாதவன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !