உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காட்டுமன்னார் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் தலைமை தாங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக. மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., பாண்டியன் ஜெ., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், நிர்வாகிகள் பாலச்சந்தர், அசோகன், விஸ்வலிங்கம்,பழனிசாமி,இளந்தமிழன் ,முருகன் கார்த்திக், ஸ்ரீராம், பிரம்மதீஸ்வரன், நாகரத்தினம், குகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பிரசித்தி பெற்ற, ஞானவிநாயகர் கோவில், காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை