உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில் மாற்றுதிறனாளிகள் 3 பேருக்கு, மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிளை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விழாவில், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், நிர்வாகிகள் பாலமுருகன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ