உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா த.வீ.செ. மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் த.வீ.செ. மேல்நிலைப்பள்ளி பழமுதிர்ச்சோலை, ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி சிகாமணி, ஸ்ரீ நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி அழகுசெல்வம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் வரவேற்றார். மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 409 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பேரூராட்சி துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், தி.மு.க., நகர செயலாளர் செல்வகுமார், மாணவரணி சாமிநாதன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை