உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்

சிதம்பரம் : சிதம்பரம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வல்லம்படுகை ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் ஞானகுமார் பங்கேற்று, 13 துப்புரவு பணியாளருக்கு புத்தாடை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ