உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே ஊழியர் சங்க கூட்டம்

ரயில்வே ஊழியர் சங்க கூட்டம்

கடலுார் : கடலுார் முதுநகர் ரயில் நிலைய வளாகத்தில் தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் பொது மகாசபை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பலராம் தலைமை தாங்கினார். சம்பத்குமார் வரவேற்றார். கோட்ட தலைவர் சிவக்குமார், கோட்ட செயலாளர் கரிகாலன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வெங்கடேசன், முன்னாள் கோட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.ஆள் பற்றாக்குறை மற்றும் பவர் ஜே.இ., நியமிக்க வேண்டும். 36மணி நேர வேலைப்பளுவை குறைத்து 8 மணி நேரம் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்ட பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை