உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீராணம் ஏரியை பாதுகாக்க பேரணி

வீராணம் ஏரியை பாதுகாக்க பேரணி

காட்டுமன்னார்கோவில்; கடலுார் அஞ்சல் கோட்டம் சார்பில் வீராணம் ஏரியை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.லால்பேட்டை துணை அஞ்சலகத்தில் பேரணியை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரணி நத்தமலை வரை நடந்தது. பேரணி திருச்சின்னபுரம் கிராமத்தின் வழியாக சென்ற போது கிராமத்தில் உள்ள சோழர் கால அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறித்து சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு விக்ரமன், பூங்குழலி ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் விளக்கினர்.காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், வீராணம் ஏரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சிதம்பரம் மேற்கு உட்கோட்ட ஆய்வாளர் பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி காமராஜ் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ