உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை கட்டடம் திறப்பு

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு கிளாங்காட்டில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாய் செலவில், சேத்தியாத்தோப்பு அருகே கிளாங்காடு கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. அதனை நேற்று, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் வரவேற்றார்.அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகரசெயலாளர் நன்மாறன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், கருப்பன், விநாயகமூர்த்தி, பேரூராட்சி முன்னாள் தலைவர் பட்டுகணேசன், துணைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ