மேலும் செய்திகள்
சாலை குழி சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
20-Jul-2025
திட்டக்குடி : திட்டக்குடி அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளம் 'தினமலர்' செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை ஊழியர்கள் சீரமைத்தனர். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி - வையங்குடி சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழைக்கு வையங்குடி அருகே சாலையின் நடுவே 3 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைந்தனர். இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, திட்டக்குடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கண்ணன் தலைமையிலான சாலை பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்தனர்.
20-Jul-2025