உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

 குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

மந்தாரக்குப்பம்: ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதன் பின் தினமும் குழாய்கள் மூலம் வீடு மற்றும் கடைகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது 'குளோரின்' கலந்து வழங்கப்படுகிறா மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டி, சுத்தம் செய்யப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து ஊராட்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சுத்தம் செய்த நாள் மற்றும் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் எழுத வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீரால் பரவக்கூடிய காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை