உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆலந்துறை கோவில் கோபுரத்தில் செடி, கொடிகள் அகற்ற கோரிக்கை

ஆலந்துறை கோவில் கோபுரத்தில் செடி, கொடிகள் அகற்ற கோரிக்கை

பெண்ணாடம்: சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் கோபுரத்தில் மண்டிய செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு அடுத்ததாக ஐந்து நிலை பெரிய கோபுரம் உடையது. இக்கோவிலைச் சுற்றி 12 அடி உயர சுற்றுச்சுவர் உள்ளது.இக்கோவில், கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பிேஷகம் நடந்தது.போதிய பராமரிப்பின்றி உள்ள கோவில் ராஜ கோபுரத்தில் செடி, கொடிகள் மண்டியுள்ளதால் மீண்டும் கோபுரம் பாழடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் கோபுரத்தில் மண்டிய செடி, கொடிகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ