உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாலாஜா ஏரியை துார் வார கோரிக்கை

 வாலாஜா ஏரியை துார் வார கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: பின்னலுார் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி துார்வாரி தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே, வாலாஜா ஏரி மொத்தம், 1618 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் இங்கு வந்தடைகிறது. மழைவெள்ளம் மற்றும் வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து வாலாஜா ஏரியில் நிரப்பப்பட்டு பெருமாள் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. வாலாஜா ஏரியின் மூலம், பின்னலுார், கரைமேடு, தலைக்குளம், அம்பாள்புரம், கிருஷ்ணாபுரம், குமுடிமுளை, சாத்தப்பாடி, ஜெயங்கொண்டான், கொளக்குடி, கொத்தவாச்சேரி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. கோடைகாலங்களில் வீராணம் ஏரி வறண்டு போகும்போது, வாலாஜா ஏரி பரவனாற்றில் 'பம்ப்' செய்து சென்னைக்கு குடிதண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013-2014 ம் ஆண்டு நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் பரவனாற்றை துார்வாரியபோது வாலாஜா ஏரியின் நான்கில் ஒரு பகுதி மட்டும் துார்வாரி கரையை உயர்த்தி பலப்படுத்தியது. ஏரியை அப்போது ஆழப்படுத்தி துார்வாராததால் தற்போது 90 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஏரி முழுதும் துார்வாராமல் கருவேல முட்புதர்களும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் புதர்மண்டியுள்ளது. சீமை கருவேல மரங்கள் காடாக வளர்ந்து ஏரியின் பாதியளவு புதர் மண்டியுள்ளதால் மழைகாலங்களில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைத்து கோடை காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை