உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கால்நடை மருத்துவமனையில் தொற்றுநோய் அபாயம்

 கால்நடை மருத்துவமனையில் தொற்றுநோய் அபாயம்

நடுவீரப்பட்டு: கால்நடை மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது . நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் கால்நடை மருத்துவமனை கடந்த 2018 ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையில் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில் மழைநீர் தேங்குகிறது. இதனால் சேறும் சகதியுமாக மாறி, சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு நோய்தொற்று ஏற்படு ம் அபாயம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை