உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளை நிலங்களில் தாழ்வான மின் கம்பிகளால் ஆபத்து

விளை நிலங்களில் தாழ்வான மின் கம்பிகளால் ஆபத்து

பெண்ணாடம்,: தாழநல்லுாரில் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் விளை நிலங்களில் கிராம விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் முடிந்து, குறுவை நெல் நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதி விளை நிலங்களின் வழியே செல்லும் மின்கம்பிகள் எட்டி தொடும் தொலைவில் தாழ்வாகச் செல்கின்றன. மின்கம்பிகளை அகற்ற அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சம்பா அறுவடை செய்த விளை நிலங்களை டிராக்டர் மூலம் உழுவதற்கு முடியாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், இதேபோன்று, நந்திமங்கலம், கோனுார் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.எனவே, தாழநல்லுார் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ