உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழிப்பறி ஆசாமி குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறி ஆசாமி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வழிபறி செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நெல்லிக்குப்பம் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்த பச்சமுத்து மகன் பார்த்திபன்,28; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 4ம் தேதி பைக்கில் கடலூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வானமாதேவி அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிந்து வழிபறி செய்த நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யாவை, 26; கைது செய்தனர்.இவர் மீது சென்னை உட்பட பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. எனவே, இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான உத்தரவை கடலூர் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை