மேலும் செய்திகள்
மாணவிகளை பின் தொடர்ந்து ரோமியோக்கள் அட்டகாசம்
15-Aug-2025
பெண்ணாடம் : பெண்ணாடம் பஸ் ஸ்டாண்டில் 'ரோமியோக்கள்' அடாவடியால் மாணவிகள், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்ணாடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பெண்ணாடம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதால், காலை, மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகளவில் காணப்படும். பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவிகளை குறிவைத்து, ரோமியோக்கள் சுற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் கிண்டல் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதேபோன்று பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்களையும் ரோமியோக்கள் கலாய்ப்பது தொடர்கிறது. இதனை தட்டிக் கேட்கும் சக பயணிகளை ரோமியோக்கள் மிரட்டும் சம்பவமும் அரங்கேறுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் 'ரோமியோ'க்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-Aug-2025