உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 3 லட்சம் கண் கண்ணாடி பிரவீன் அய்யப்பன் வழங்கல்

ரூ. 3 லட்சம் கண் கண்ணாடி பிரவீன் அய்யப்பன் வழங்கல்

கடலுார், : கடலுாரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன், 200 பயனாளிகளுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கண் கண்ணாடி வழங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில், பார்வை குறைபாடு உள்ள பயனாளிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கி, 200 பயனாளிகளுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கண் கண்ணாடி வழங்கினார்.மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, அரிமா மாவட்டத் தலைவர் தினகரன், தலைமை ஆசிரியை இந்திரா முன்னிலை வகித்தனர். விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், சன் பிரைட் பிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், அரிமா ராஜா, சந்தோஷ், பிரபா, சிவகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி