உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கல்லறை தோட்ட பங்களாவில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடலுார் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தில் கல்லறை அருகே உள்ள பாழடைந்த பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் புதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடலூர் சி.என்.பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்,45; என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரிவந்து, அவரை பிடிதது, காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை