உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சகஜானந்தா ஜெயந்தி விழா

சகஜானந்தா ஜெயந்தி விழா

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தாவின் 134வது ஜெயந்தி விழா கொண்டப்பட்டது சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சம்மந்தம், த.மா.கா., நகர தலைவர் ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பளராக காட்டுமன்னார்கோவிலில் 1994ல் சுவாமி சகஜானந்தா சிலையை நிறுவிய முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் பங்கேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.வர்த்தக சங்க தலைவர் சீனிவாச நாராயணன் பங்கேற்று சகஜானந்தா குறித்து கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் இயன்முறை மருத்துவர் உமாபதிபிள்ளை, துரைசாமி, ராமச்சந்திரன், முருகானந்தம், ஒன்றிய தலைவர் தங்கசாமி, பொட்டு ராமானுஜம், ரமேஷ், ராஜசேகர், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ