உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் திருட்டு ஜே.சி.பி., பறிமுதல்

மணல் திருட்டு ஜே.சி.பி., பறிமுதல்

திட்டக்குடி : வெள்ளாற்றில் மணல் திருட பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி., இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, கீழக்கல்பூண்டி அருகே வெள்ளாற்றிலிருந்து ஜே.சி.பி., மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் லாரியுடன் தப்பி சென்றது. ஜே.சி.பி.,டிரைவரை சுற்றி வளைத்த போலீசார், திருட்டுத்தனமாக மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். ஜே.சி.பி.,டிரைவர் ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசமூர்த்தி,23, என்பவரை கைது செய்தனர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்