உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி மாணவர்கள், சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு கல்வி சுற்றுலா வந்தனர். காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி மாணவ, மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு கல்வி சுற்றுலா வருகை தந்தனர். பள்ளி தாளாளர் பரணிதரன் தலைமையில், 3 வேன் மூலம் ரயில் நிலையத்திற்கு மாணவர்கள் வந்தனர். மாணவ, மாணவிகளுக்கு ஆலயம் லயன்ஸ் சங்க த்தினர் விஜய்சங்கர், மணிகண்டன், மேத்தா, ரயில்வே பயணிகள் சங்கத்தினர் ரியாஸ், ராம வீரப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்து, பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து, ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மோ கன் ரயில்வே துறை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித் தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில், ரயில்வே தனிப்பிரிவு காவலர் கோபாலகிருஷ்ணன் ரயில்வே பணியாளர்கள் உடன் இருந்தனர். ரயிலில் வந்த பயணிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை