உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் அறிவியல் தின விழா

அரசு கல்லுாரியில் அறிவியல் தின விழா

கடலுார் : கடலுார் அரசு பெரியார் கல்லுாரி இயற்பியல் துறையில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். பேராசிரியை செல்வகுமாரி வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன், உதவிப் பேராசிரியர் கிறிஸ்டி பெர்டினன்ட் பேசினர்.விழாவை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை வேதியியல் துறைத் தலைவர் ஷர்மிளா இந்திராணி, பேராசிரியர் தம்பிதுரை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை பேராசிரியர் சந்திரசேகரன் செய்திருந்தார். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் விஜயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை