உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொடர் விடுமுறை எதிரொலி; டோல்கேட்டில் கூடுதல் பாதை திறப்பு

தொடர் விடுமுறை எதிரொலி; டோல்கேட்டில் கூடுதல் பாதை திறப்பு

விக்கிரவாண்டி : பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணி வகுத்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி டோல் கேட்டில், கூடுதல் பாதைகள் திறக்கப்பட்டன.பொங்கல் பண்டிகைக்கு இன்று 13ம் தேதி முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கலை தங்கள் ஊரில் கொண்டாட திட்டமிட்டு, நேற்று முதல் தென் மாவட்டங்ளை நோக்கிச் செல்லத் துவங்கினர்.இதனால் சாலையில் கார், பஸ், வேன், ஆட்டோ, பைக் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன.விக்கிரவாண்டி டோல் கேட்டை நேற்று மாலை 7:00 மணி வரை 32 ஆயிரம் வாகனங்கள் கடந்தன. தென் மாவட்டங்களை நோக்கிச் சென்ற வாகனங்களுக்கு கூடுதலாக இரண்டு பாதைகள் திறக்கப்பட்டு 8 லேன்களிலும் நெரிசல் இன்றி வாகனங்கள் கடந்து சென்றன.இன்றும் தொடர்ந்து கூடுதலாக வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை