உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா

சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில், அனைத்து வியாபாரிகள் சார்பில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடைவீதி திருவிழா நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.அதையொட்டி அன்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு சாமி கடை வீதியில் மண்டகப்படிக்கு வீதியுலாவாக வந்தது.மதியம் 1:00 மணிக்கு கடைவீதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, 4:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 10:00 மணிக்கு காமதேனு வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை வியாபாரிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ