மேலும் செய்திகள்
விடையாற்றி உற்சவம்
3 hour(s) ago
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
3 hour(s) ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
6 hour(s) ago
புதுச்சத்திரம்: தேர்தல் பறக்கும் படைக்கு டி.போர்டு வாகனத்தை பயன்படுத்தாமல், ஓன் போர்டு வாகனம் பயன்படுத்துவதை கண்டித்து, ஓட்டுநர்கள் நலச்சங்க நிர்வாகிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர், வாகனங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படைக்கு போதுமான அரசு வாகனங்கள் இல்லாத நிலையில், தனியாரிடமும் வாடகைக்கு எடுத்து் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் எப்.எஸ்.டி. பி2 பறக்கும்படைக்கு தனியாரிடம் டவேரா கார் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த கார் வாடகை வாகனமாக இல்லாமல், சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவது என கூறப்படுகிறது. நேற்று மாலை புதுச்சத்திரம் பகுதிக்கு வந்த பறக்கும் படை காரை பார்த்த அப்பகுதி வாடகை கார் ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு பணிக்கு சொந்த வாகனத்தை பயன்படுத்துவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக்கூறி, அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் பாலகுரு தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர், பறக்கும்படை வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சிதம்பரம் மண்டல போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஏ.எஸ்.பி., ரகுபதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, இனி, டி.போர்டு வாகனத்தை தேர்தல் பறக்கும்படை வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago
6 hour(s) ago