உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு சிறப்பு கூட்டம்

கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு சிறப்பு கூட்டம்

கடலுார் : கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் கடலுார் மண்டல அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு கூட்டம் நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரில் நடந்த கூட்டத்தில், மண்டல தலைவர் செந்தமிழ்கொற்றவன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மற்றும் மாநில இணை செயலாளர் ஜெயராமன், மண்டல பொருளாளர் அருள் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், மண்டல அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.இதில், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு கடலுாரில் நடத்துவது. நிலத்தரகர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும், கட்டுமான பொறியாளர்களுக்கு கவுன்சிலிங் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, மாநில பொருளாளர் ஜெகதீசன், மாநில இணை செயலாளர் ஜெகமுருகன், துணை செயலாளர் பாபு, மண்டல துணை தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை