உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார். முகாமில், 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். முகாமில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் அருள்முருகன், ராஜேஸ்வரி வேல்முருகன், சரவணன், ரொகையாமா குன்முகமது, முன்னாள் துணை சேர்மன் நடராஜன், முன்னாள் துணை செயலாளர் சரவணன், அலி அப்பாஸ் பங்கேற்றனர். செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை