உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான இறகுபந்து போட்டி

மாநில அளவிலான இறகுபந்து போட்டி

சிதம்பரம் : சிதம்பரத்தில் டென்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. டென்ஸ் கிளப் சார்பில் சிகப்பி ஆச்சி நினைவு மாநில அளவிலான இறகுபந்துபோட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை வளாக உள் விளையாட்டரங்கில் இரண்டு நாட்கள் நடந்தது. ஐந்து பிரிவுகளாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 அணிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பொறியியல் புல முதல்வர் பழனியப்பன் போட்டியை துவக்கி வைத்தார். மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் டென்ஸ் கிளப் தலைவர் அருள் தலைமை தாங்கினார், செயலர் உத்திராபதி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி பரிசு வழங்கினார். துறை பேராசிரியர்கள் முருகையன், கனகசபை உட்பட பலர் பங்கேற்றனர். சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை