உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

பைக் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 35; இவருக்கு ராகவன், 14; ரக்சன், 11; என இரு மகன்கள் உள்ளனர். இறையூரில் அரசு உதவி பெறும் அருணா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ராகவன், தந்தையிடம் பைக் வாங்கித் தருமாறு கேட்டார்.பள்ளி படிப்பு முடிந்த பிறகு வாங்கித் தருவதாக ரமேஷ் கூறினார். இதனால் மனமுடைந்த ராகவன் நேற்றிரவு 7:00 மணிக்கு வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்ட குடும்பத் தினர், ராகவனை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை