உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் விளையாட்டு மைதானத்தில் பாம்பு கடித்த மாணவனுக்கு சிகிச்சை

கடலுார் விளையாட்டு மைதானத்தில் பாம்பு கடித்த மாணவனுக்கு சிகிச்சை

கடலுார்; கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், பயிற்சிக்கு வந்த மாணவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம். நேற்று காலை கடலுார் முதுநகரைச் சேர்ந்த நந்தீஸ்வரன்,18, என்ற கல்லுாரி மாணவர் பயிற்சிக்காக அண்ணா விளையாட்டரங்கிற்கு வந்தார். 8.30மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த மாணவரின் காலில் பாம்பு கடித்தது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பயிற்சிக்கு வந்த மாணவனை பாம்பு கடித்தது, அப்பகுதியில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மைதானத்தை முறையாக பராமரிக்கவும், புதர் மண்டிப்போய் உள்ளதை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ