மேலும் செய்திகள்
கருவூலத்துறையில் ஆய்வு கூட்டம்
4 minutes ago
கடலுாரில் 20,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
25-Nov-2025
க டலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் தலைமையில், தீவிர வாக்காளர் பட்டியல் பணி நடக்கிறது. அதில், 10 ஓட்டுச்சாவடிக்கு, ஒரு மேற்பார்வையாளர், 2 கூடுதல் துணை மேற்பார்வையாளர், ஒரு பாகத்திற்கு ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் என ஒரு 15 க்கும் மேற்பட்டோர், அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் தொகுதியின், தேர்தல் அலுவலராக உள்ள சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமையில், தொகுதி முழுவதும், இப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஈடுபடும், மேற்பார்வையாளர்களிடம் துவக்கத்தில் இருந்தே தினமும், சூம் மீட்டிங் மூலம், அவர் பேசி பணிகளில் ஏற்படும் சுணக்கங்களை தீர்த்து, விரைவாக செய்ய முடுக்கி விட்டார். அதே சமயம், பணிகளை விரைந்து முடிப்பவர்களுக்கு, ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கிறது என ஊக்கப்படுத்தினார். தற்போது மாவட்டத்தில், சிதம்பரம் தொகுதியில் மட்டும் 70 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதி முதலிடத்திலும், சிதம்பரம் தொகுதி இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன்தினம், சிதம்பரம் தொகுதியில் அதிக அளவு விண்ணப்பங்களை பெற்று, பதிவேற்றம் செய்த மேற்பார்வையாளர் ஆனந்தபாபு தலைமையிலான குழுவினரை, திடீரென சிதம்பரம் அழைத்த, சப் கலெக்டர் கிஷன் குமார், அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். சிதம்பரத்தில் உள்ள ஒரு அசைவ ஓட்டலுக்கு அழைத்து சென்று, அனைவரிடமும் கலந்துரையாடி, அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து, அவர்களுடன் உணவு அருந்தி, உற்சாகப்படுத்தினார். இந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 minutes ago
25-Nov-2025