உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி மின்கம்பம் சேதமடைந்தது.நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.நேற்று மாலை 5:00 மணிக்கு விருத்தாசலம் அடுத்த கோ.பென்னேரி பகுதியிலிருந்து கரும்பு ஏற்றிய டிராக்டர் (டி.என்.31 ஏ இசட் 2297) நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது.டிராக்டர் நடுவீரப்பட்டு அடுத்த நரியங்குப்பம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. மின்கம்பம் முழுமையாக சேதமடைந்தது. போக்குவரத்து தடைபட்டது.தகவலறிந்த நடுவீரப்பட்டு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக வந்து மின் இணைப்பை துண்டித்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை