உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்

ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில், ரூ. 40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சி 4 வது வார்டில் உள்ள வெள்ளக்குளம் துார்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்குளத்திற்கு ரூ. 40 லட்சம்செலவில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கியுள்ளது.பணியை, பேரூராட்சி தலைவர் பழனி துவக்கி வைத்தார்.துணைத் தலைவர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் ஜோதி முருகன், பணி மேற்பார்வையாளர் பாபு, தொழில்நுட்ப உதவியாளர் ஜெஸ்டின் ராஜா மற்றும் உறுப்பினர்கள்அன்பரசு, வேலு, வேலாயுதம், விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை