உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்கள் கவுரவிப்பு

ஆசிரியர்கள் கவுரவிப்பு

கடலுார் : கடலுார் சுமங்கலி சில்க்ஸ் நிறுவனம் சார்பில், லட்சிய ஆசிரியர் விருதுபெறும் விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்ட்டனர்.கடலுார் செங்குந்தர் திருமண மண்டபத்தில், தினமலர் நாளிதழ் சார்பில், ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கிய சுமங்கலி சில்க்ஸ், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், சுமங்கலி சில்க்ஸ் சார்பில் 500 ரூபாய் பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இந்த பரிசு கூப்பன்களை பெற்ற ஆசிரியர்கள், அந்நிறுவனத்தில் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்கிச் சென்றனர். கடைக்கு வருகை தந்த ஆசிரியர்களை சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலி வரவேற்று, கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !