உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் பணி மிகவும் சவாலானது மனிதவள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் பேச்சு

ஆசிரியர் பணி மிகவும் சவாலானது மனிதவள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் பேச்சு

கடலுார் : 'இன்றைய சூழலில், ஆசிரியர் பணி மிகவும் சவாலானது' என, சென்னை அவசெண்ட் சொல்யூஷன் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் பேசினார்.'தினமலர்' நாளிதழ் சார்பில், கடலுாரில் நடந்த ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் 'லட்சிய ஆசிரியர் விருது' வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:ஆண், பெண் சிறிய தவறு செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூகம், திருநங்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. நான் திருநங்கை என்பதால் கல்லுாரியில் சேர கூட முடியாமல் தவித்தேன். ஏளனமாக பேசி எட்டி உதைத்தனர். கீழே விழுந்த நான் சோர்ந்துவிடவில்லை. எனது லட்சியப்பாதை என்னை இங்கே மேடையில் நிற்க வைத்துள்ளது.சென்னை அரசு துவக்கப் பள்ளியில் எனது சமூகப் பணி துவங்கியது. அடுத்த தலைமுறை முன்னேற வேண்டும் என்பதற்காக, சமூக பணி என்ற எனது லட்சிய பணி தொடர்கிறது.இன்றைய சூழலில், காலம் மாறிக் கொண்டியிருக்கிறது. தொழிலாளர்கள், பொதுமக்கள் என, அனைவருக்குமே சிக்கல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதில், ஆசிரியர் பணி என்பது மிக சவாலானதாக உள்ளது. மாணவர்களின் வாழ்க்கையும், உயர்வும் ஆசிரியர்கள் கையில் மட்டுமே உள்ளது. ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு லட்சியத்துடன் வர வேண்டும்.பள்ளி பருவத்தில் மாணவர்களின் கருப்பு, வெள்ளை திரைகளை அகற்றி, ஒளியை காட்டுவது ஆசிரியர்கள்தான். மாணவர்கள் தடம் மாறாமல் அவர்களை நல்வழிப்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஒருங்கிணைப்பு மிக முக்கிய பணியாக உள்ளது.ஆசிரியர்களாக இருப்பவர்கள் தலைமை ஆசிரியர்களாக வர ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் மன அழுத்த பிரச்னை.மாணவர்களை சிறந்த குடிமகனாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் உள்ளது. வெளிநாடுகளில் பள்ளிகளில் துப்பாக்கி கலாசாரம் உள்ளது. ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு காரணம் உளவியல் பிரச்னை.சவாலான மாணவர்கள், ஒத்துழைக்காத ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், அரசியல் அழுத்தம் போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளையும் தாண்டி ஆசிரியர்கள் பணி உள்ளது. களேபரமான நாட்களில் கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் மன அழுத்ததிற்கு ஆளாகும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்கும் வழிமுறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ