உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி வாலிபர் சாவு

பைக் மோதி வாலிபர் சாவு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 32; நேற்று முன்தினம், ஆத்திரிக்குப்பம் - பேர்பெரியாங்குப்பம் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஆனந்தராஜ் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை