உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய மீனவரின் உடல் கரை ஒதுங்கியது

படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய மீனவரின் உடல் கரை ஒதுங்கியது

கிள்ளை : கிள்ளை அருகே வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன மீனவரின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.கிள்ளை சின்னவாய்க்கால் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீனவசெல்வம், 45; தயாளமூர்த்தி, 50; இருவரும் கடந்த 19ம் தேதி கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினர். வெள்ளாற்று முகத்துவாரத்தில் வரும்போது, முகத்துவாரம் துார்ந்திருந்ததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னவாய்க்கால் கடற்கரையோரம் மீனவசெல்வத்தின் உடல் கரை ஒதுங்கியது. காணாமல்போன தயாளமூர்த்தியை சின்னவாய்க்கால் கிராமத்தினர் படகில் சென்று கடற்கரையோரம் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று தயாளமூர்த்தியின் உடல் சின்னவாய்க்கால் கடற்கரையோரம் ஒதுங்கியது. தகவலறிந்த, கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தயாளமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி