உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவறி விழுந்து விவசாயி சாவு

தவறி விழுந்து விவசாயி சாவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், 49; பொன்னுரங்கம், 40; விவசாயிகளான இவர் நேற்று பு.முட்லுாரில் இருந்து சேந்திரக்கிள்ளைக்கு பைக்கில் புறப்பட்டனர். பொன்னுரங்கம் பைக்கை ஓட்டினார்.மஞ்சக்குழி கிராமம் அருகே சென்றபோது, பைக்கில் பின்னால் உட்கார்ந்திருந்த ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடன் அவரை, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ