உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீனவர் உடல் கரை ஒதுங்கியது

மீனவர் உடல் கரை ஒதுங்கியது

கிள்ளை : கிள்ளை அருகே வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான மீனவரின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.கிள்ளை அருகே உள்ள சி.மானம்பாடியை சேர்ந்த சுரேந்திரன், 28; கிள்ளை சரண்யன், 39; கீழ் அனுவம்பட்டு குரு, 27; ஆகியோர் 12ம் தேதி, படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு திரும்பியபோது, வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்தது.இதில், சுரேந்திரன் மாயமானார். சரண்யன், குரு இருவரும் நீந்தி கரையேறினர். இந்நிலையில், நேற்று வெள்ளாற்று முகத்துவாரம் அருகே சுரேந்திரன் உடல் கரை ஒதுங்கியது.கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை