உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரிய ஓடை பாலம் கட்டும் பணி மந்தம் தாழநல்லுார் பகுதி மக்கள் கடும் அவதி

பெரிய ஓடை பாலம் கட்டும் பணி மந்தம் தாழநல்லுார் பகுதி மக்கள் கடும் அவதி

பெண்ணாடம்: தாழநல்லுாரில் பெரிய ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் பணி மந்தமாக நடப்பதால் கிராம மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ரயில் நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்தி காலனி பகுதி மக்கள் குடியிருப்புகளுக்கும் மற்றும் ரயில் நிலையம், விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று வந்தனர். மழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பது வழக்கம். இப்பகுதி மக்கள் ஓடையின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை விடுத்தனர்.அதையேற்று, கடந்த 10 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. பாலத்தையொட்டி போக்குவரத்து வசதிக்காக மண் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்துள்ளன.பாலம் பணிகள் தரை மட்டத்தில் கான்கிரீட் அமைத்த நிலையில் மந்தமாக நடப்பதால் இப்பகுதி மக்கள் ரயில் நிலையம், விளைநிலங்களுக்கு செல்வோர்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்வோர் அவதியடைகின்றனர். எனவே, மந்தமாக நடந்து வரும் ஓடை பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ