உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தன்னம்பிக்கை தரும் தினமலர் கூட்டுறவு சங்க நிர்வாகி பெருமிதம்

தன்னம்பிக்கை தரும் தினமலர் கூட்டுறவு சங்க நிர்வாகி பெருமிதம்

புவனகிரி,: இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய நாளிதழாக தினமலர் விளங்கி வருகிறது என, புவனகிரி பருத்தி கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவர் அபிராமி பட்டு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தி: தினமலர் நாளிதழின் நீண்டநாள் வாசகன் என்பதில் பெருமைப்படுகிறேன். பவள விழா காணும் தினமலர் நாளிதழையும், அதன் நிறுவனரையும் வணங்கி மகிழ்கிறேன். இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய மிகச்சிறந்த நாளிதழாக தினமலர் விளங்கி வருகிறது. சிறுவர் மலரை படிக்கும்போது, நான் சிறுவனாகவே மாறுகின்ற ஒரு நிலையை காண்கிறேன். காலையில் நடை பயிற்சி செல்கிறனோ, இல்லையோ தினமலரை முழுமையாக படிப்பேன். இதில் ஒதுக்குவதற்கான எந்த பக்கமும் இல்லை. அனைத்து பக்கமும் நாளுக்கு நாள் புதுப்பொலிவு பெறுகிறது. நாட்டு நடப்புகள், அரசியல், ஆன்மிகம், விளையாட்டு என காலையில் வாசகர்களுக்குபல்சுவைகளை தருகிறது. தினமலர் வையகம் உள்ளவரை, தனது ஊடக சேவையை தேசப்பற்றுடன், துணிச்சலாக, நேர்மையாக செய்யும் என்பது உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி