உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் மீதான கலவர வழக்கு பிப்., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான கலவர வழக்கு பிப்., 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடலுார்: போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மீதான கலவர வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அரியலுார் மாவட்டம் செந்துறை அடுத்த சன்னாசிநல்லுார், கடலுார் மாவட்டம் ஆவினங்குடி அடுத்த நெய்வாசல் இடையே உள்ள வௌ்ளாற்றில் கடந்த 2015ம் ஆண்டு செயல்பட்டு வந்த மணல் குவாரியில் மணல் ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது. மோதலை தவிர்க்க வருவாய் துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது.தடையை மீறி 31.1.2015 அன்று அரிய லுார் மாவட்டத்தை சேர்ந்த தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மணல் அள்ள முயன்றதில் கலவரம் ஏற்பட்டது. அதில், 9 போலீசார் காயமடைந்தனர். அரசு ஜீப், பொக்லைன் இயந்திரம் சேதமாகின.இதுகுறித்து ஆவினங்குடி போலீசார், சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது திட்டக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.பின்னர் இவ்வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கடலுார் மாவட்ட அமர்வு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், விசாரணையை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை