அரசு பள்ளியில் திருக்குறள் திருவிழா
கடலுார்: பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கஸ்துாரி வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், முற்றோதல் நிகழ்ச்சி, திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் கஸ்துாரி, கனிமொழி ஆகியோர் போட்டியை நடத்தினர். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் கஸ்துாரி நன்றி கூறினார்.