உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா பத்திரிக்கை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா பத்திரிக்கை

சிதம்பரம் : சிதம்பரத்தில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை நிகழ்ச்சிக்காக பத்திரிகை படையல் நடந்தது. சிதம்பரத்தில், அடுத்த மாதம் 3 ம் தேதி திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடைபெறுகிறது. அதனையொட்டி, சிதம்பரம் நாராயணன் தெருவில் உள்ள குலாலர் சமூகத்திற்கு சொந்தமான மடத்தில் பத்திரிகை படையல் நடந்தது. திருநீலகண்டர் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, குருபூஜை விழா பத்திரிக்கை படைக்கப்பட்டது. இதில் சிவ பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து குலாலர் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள், மாநில பொதுச் செயலாளர் ராஜா, பொருளாளர் ரேவதி, இளைஞரணி ஹரிஹரன், மணி, இளைஞரணி தலைவர்கள் ஆகாஷ், ரோஹித்குமார்.மகளிர் அணியினர் சரோஜா, மீனாம்பிகை, சசிகலா மற்றும் பலர் பங்கேற்றார்கள். நிகழ்வில் தமிழக அரசு, சிதம்பரம் குலாலர் சமுதாயத்திற்கு சொந்தமான மடத்தில் திருநீலகண்ட நாயனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை