உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவள்ளுவர் சிலை  திறப்பு

திருவள்ளுவர் சிலை  திறப்பு

நெய்வேலி: நெய்வேலியில், என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்கத்தில் திருவள்ளுவர் உருவ சிலையை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.நெய்வேலியில் முதல் சுரங்க தொகுப்பு அலுவலக வளாகத்தில் அந்நிறுவனத்தின் சார்பில், திருவள்ளுவர் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. நேற்று திருப்பு விழா நடந்தது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கி சிலையை திறந்து வைத்து, திருக்குறளின் பெருமைகளை விளக்கி பேசினார்.்நிகழ்ச்சியில் என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்பரூப், மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, சுரங்கத்துறை செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ் மற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை