உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மரம் விழுந்து அறுந்த மின்கம்பி மின்சாரம் பாய்ந்து மூவர் மரணம்

 மரம் விழுந்து அறுந்த மின்கம்பி மின்சாரம் பாய்ந்து மூவர் மரணம்

சேத்தியாத்தோப்பு: மழையின்போது, புளிய மரம் விழுந்து அறுந்த மின்கம்பியால், மின்சாரம் பாய்ந்து மூன்று முதியவர்கள் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம், சி.சாத்தமங்கலம் மெயின் ரோட்டில், நேற்று மதியம், 2:30 மணியளவில், புளியமரம் வேரோடு அருகிலிருந்த வீட்டின் மீது சாய்ந்து விழுந்தது. இதில், மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது, வீட்டின் வெளியே நின்ற மரியசூசை, 70, அவரது மனைவி பிலோன்மேரி, 65, மற்றும் வனதாஸ்மேரி, 70, ஆகியோர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை