உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 21,23,276 பேர்

கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 21,23,276 பேர்

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான, 2024ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதில், மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 பேர் இடம் பெற்றுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்., 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உள்ளவாறு, கடலுார் மாவட்டத்தின் அப்போதைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 294 ஆகும். அதனை தொடர்ந்து, 01.01.2024 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது.சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில், மொத்தம் 82,884 மனுக்கள் பெறப்பட்டது. அதில், 3166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு, 16,458 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்று காலை கலெக்டர் அருண்தம்புராஜ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 2024ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அப்போது கலெக்டர் கூறியது:கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 21,23,276 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் 10,45,551, பெண் 10,77,438, இதரர் 287 ஆகும்.புதிய வாக்காளர் பட்டியலின்படி, கடலுார் மாவட்டத்தின் 9 சட்டசபை தொகுதி வாரியாக,திட்டக்குடி (தனி) தொகுதியில் 2,16,499 வாக்காளர்கள், உள்ளனர். விருத்தாசலத்தில் 2,51,762, நெய்வேலி தொகுதியில் 2,01,309, பண்ருட்டி தொகுதியில் 2,47,570, கடலுாரில் 2,39,641 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.குறிஞ்சிப்பாடி தொகுதியில் 2,44,611, புவனகிரியில் 2,49,163, சிதம்பரத்தில் 2,43,565, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2,29,156 பேர் இடம் பெற்றுள்ளனர்.வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தமுறை நடைபெற உள்ளதால் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வேலைநாட்களில் அளிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நேர்முக உதவியாளர்(பொ) ஜெகதீஸ்வரன், தேர்தல் தாசில்தார் ஹரிதாஸ், மற்றும் அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ