உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தற்காலிக பஸ் ஸ்டாண்டு கடைகளை மூடி வியாபாரிகள் எதிர்ப்பு

 தற்காலிக பஸ் ஸ்டாண்டு கடைகளை மூடி வியாபாரிகள் எதிர்ப்பு

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடைகளை வாடகைதாரர்கள் மூடினர். பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில், கடந்த பிப்ரவரியில் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கினர். இதற்காக 75 சதவீத பஸ் ஸ்டாண்டு பகுதியில் தகடுகள் வைத்து மூடினர். ஆனால் பணிகள் இன்னும் தரைமட்டத்தி லேயே உள்ளன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் குண்டும், குழியுமானதால் தற்காலிகமாக இன்று முதல் பஸ் ஸ்டாண்டு போக்குவரத்து பணிமனை அருகில் செயல்படும்; இதனால் பஸ் ஸ்டாண்டு கடை வாடகைதாரர்கள் கடைகளை மூட வேண்டும்; என நகராட்சி சார்பில் அறிவித்தனர். இதற்கு கடை வாடகைதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் ஸ்டாண்டு கடைகள் தொடர்ந்து செயல்படவும், மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், நேற்று முன்தினம் நகராட்சி கமிஷ்னர் காஞ்சனாவிடம், மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் பஸ் ஸ்டாண்டு கடை வாட கைதாரர்கள் தங்களது, 50 கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து கடை வாடகைதாரர்கள் கூறுகையில்,'கட்டுமான பணிக்காக அதிக பரப்பளவில் இடம் எடுத்துக்கொண்டனர். இதனை குறைத்து பஸ் ஸ்டாண்டு பராமரிப்பு பணிகள் செய்து, வியாபாரிகள், வாகன ஒட்டிகள், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நகராட்சி செயல்பட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி