உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

கடலுார்: கடலுார் மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமை தாங்கினார். திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் முன்னிலை வகித்தார். கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ