உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரு நாள் மழைக்கே தாங்காத மேற்கூரை சிதம்பரத்தில் ரயில் பயணிகள் அதிர்ச்சி

ஒரு நாள் மழைக்கே தாங்காத மேற்கூரை சிதம்பரத்தில் ரயில் பயணிகள் அதிர்ச்சி

சிதம்பரம் : சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் நடந்த அம்ரூத் திட்ட பணிகள், ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காமல் மேற்கூரை சேதமானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபாய் நிதியில், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 6 மாதங்களாக மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதில், புதிய நடைமேடை கூரை, மின்னொளி அறிவிப்பு பலகை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இணைப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிதம்பரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையில் புதியதாக அமைக்கப்பட்ட நடைமேடை மேற்கூரைகள் பெயர்ந்து பல இடங்களில், மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் பயணிகள் எந்த இடத்திலும் அமர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.குறிப்பாக, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ரயில்வே நுழைவு வாயில் மேற்கூரை (எலிவேஷன்) சரியான முறையில் அமைக்காததால், மின் விளக்கின் வழியாக பால் சீலிங்கில் மழைநீர் கசிந்தது. 80 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற தரமில்லாத பணிகளால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தரமின்றி செய்த பணிகளை மீண்டும் சரியான முறையில் செய்வது மட்டுமின்றி, மீதமுள்ள பணிகளையும், தரமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை